Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 31 Dec 2022 4:28:56 PM

இன்று  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

சென்னை: லேசான மழை பெய்யக்கூடும் .... கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.01.01.2023 மற்றும் 02.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது.

rainy,south tamil nadu districts ,மழை , தென் தமிழக மாவட்டங்கள்

வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.03.01.2023 மற்றும் 04.01.2023: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :
|