Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழகம் , புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

இன்று தமிழகம் , புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Sat, 22 Apr 2023 4:49:26 PM

இன்று  தமிழகம் , புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை காலம் காரணமாக வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி கொண்டு வருகிறது. கொளுத்தும் வெப்பத்திற்கு மத்தியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அதில் இன்று தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதே போன்று வருகிற 23-ம் தேதி அன்று தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர்,

rainy,tamil nadu,puduvai ,மழை ,  தமிழகம் , புதுவை

இதனை அடுத்து திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல், சேலம், தேனி, திருவண்ணாமலை திருப்பத்தூர், தர்மபுரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதே போன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும். மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் எனகும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags :
|