Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 17 Aug 2022 3:15:39 PM

இன்று தமிழ்நாடு, புதுவை காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

moderate rains,tamil nadu,puduwai karaikal ,மிதமான மழை, தமிழ்நாடு, புதுவை காரைக்கால்

இதனை தொடர்ந்து நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்ட்டுள்ளது

இதையடுத்து 19.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 21.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :