Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

By: vaithegi Sun, 18 Dec 2022 3:45:21 PM

இன்று  தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (18.12.2022 முதல் 20.12.2022) வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது

இதனை அடுத்து 21.12.2022 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

rainy,tamil nadu,puduwai,karaikal ,மழை , தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

அதைத்தொடர்ந்து 22.12.2022 அன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|