Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

By: vaithegi Mon, 03 Oct 2022 5:12:48 PM

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை: 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 03.10.2022 மற்றும் 04.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மாயம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து 05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.06.10.2022 மற்றும் 07.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

moderate rains,tamil nadu,puduvai,karaikal ,மிதமான மழை,தமிழ்நாடு, புதுவை ,காரைக்கால்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 03.10.2022 மற்றும் 04.10.2022: லட்சதீவு பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

Tags :