Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இந்த தேதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இந்த தேதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

By: vaithegi Wed, 26 Oct 2022 7:43:37 PM

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இந்த தேதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: லேசானது முதல்‌ மிதமான மழைக்கு வாய்ப்பு .... தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் அக்.26, 27ம் தேதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.. அதே போன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அக். 28ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவையில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மேலும் அக். 29 அன்று சிவகங்கை, செங்கல்பட்டு, கடலூர்‌, பெரம்பலூர்‌, விழுப்புரம்‌, இராமநாதபுரம்‌, தஞ்சாவூர்‌, தூத்துக்குடி, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, காஞ்சிபுரம்‌, தென்காசி, புதுக்கோட்டை, திருச்‌சி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, திருவாரூர்‌, விருதுநகர்‌, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளின் ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

moderate rain,meteorological centre ,மிதமான மழை,வானிலை மையம்

அதை தொடர்ந்து அக். 30ம் தேதி, தஞ்சாவூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, தூத்துக்குடி, திருவாரூர்‌, கன்னியாகுமரி, நாகப்பட்டினம்‌ ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவையின் ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழை பெய்ய கூடும். அதே போல புதுக்கோட்டை, பெரம்பலூர்‌, செங்கல்பட்டு, கரூர்‌, நீலகிரி, காஞ்சிபுரம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, கடலூர்‌, இராமநாதபுரம்‌, அரியலூர்‌, திருச்சி, சிவகங்கை, விருதுநகர்‌, திண்டுக்கல்‌, தென்காசி, மதுரை, கோயம்புத்தூர்‌, தேனி, திருப்பூர்‌, மாவட்டங்களில் கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. மேலும் அக். 29, 30 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கீ. மீ வேகத்தில் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..

Tags :