Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்

புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்

By: vaithegi Sat, 04 Feb 2023 12:19:17 PM

புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்

புதுச்சேரி: தமிழ்நாட்டை போன்று தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ..... கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் தமிழ்நாட்டில் மின் இணைப்போடு ஆதார் என் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப் பட்டிருந்தது.

இதையடுத்து அதே போலவே தற்போது புதுச்சேரியிலும் மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது.

ஆதார் எண் இணைக்க வேண்டும் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணம் ஆதார் எண்ணிற்கு பதிலாக மின் இணைப்போடு இணைக்க படலாம் என்கிற ஒரு வழிமுறையையும் புதுச்சேரி அரசு விதித்திருக்கிறது.

மேலும் மின் இணைப்பின் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக அந்த வழிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags :