Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியா மிருகக்காட்சி சாலையில் பரிதாபமான நிலையில் உள்ள சிங்கம்

நைஜீரியா மிருகக்காட்சி சாலையில் பரிதாபமான நிலையில் உள்ள சிங்கம்

By: Nagaraj Wed, 11 Nov 2020 8:01:02 PM

நைஜீரியா மிருகக்காட்சி சாலையில் பரிதாபமான நிலையில் உள்ள சிங்கம்

சிங்கத்தின் பரிதாப நிலை... நைஜீரியாவிலுள்ள ஒரு மிருகக் காட்சி சாலையில், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கத்தை பார்த்து பொதுமக்கள் கொந்தளித்து போய் உள்ளனர.

முரட்டு விலங்கு.. காட்டு ராஜா.. கம்பீர நடை.. கர்ஜனை குரல் என பல அம்சங்களுக்கு சொந்தமானதுதான் சிங்கம்... இப்படித்தான் நாம் இதுவரை பார்த்தும், கேட்டும் வந்திருக்கிறோம்.. ஆனால், எலும்பும் தோலுமாக சிங்கங்களின் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பார்த்ததும் இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்!

நைஜீரியாவில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது.. கடுனா என்ற இடத்திலுள்ள காம்ஜி கேட் என்ற வன விலங்கு பூங்காவில் நிறைய விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

animals,lion,bone and skin,viewer,photo ,விலங்குகள், சிங்கம், எலும்பும் தோலும், பார்வையாளர், புகைப்படம்

அங்குள்ள சிங்கங்களை பார்த்தால், உண்மையிலேயே அவை சிங்கம் போலவே தெரியவில்லை. மிகவும் மெலிந்து கிடக்கின்றன.. உடல்கள் ஒட்டி உள்ளன.. எலும்புகள் வெளியே தெரிகின்றன... இதுவரை கொழு கொழு சிங்கத்தை பார்த்த நமக்கு எலும்பும் தோலுமாக உள்ள சிங்கங்களை பார்க்கவே வருத்தமாக உள்ளது.

இந்த சிங்கத்தை அங்கு சென்ற ஒரு பார்வையாளர்கள் போட்டோ எடுத்து மீடியாவில் பதிவிடவும்தான் அனைவருக்கும், இது பற்றி தெரியவந்துள்ளது.. "முதலில் அந்த சிங்கத்தை பார்த்ததும் நான் ஷாக் ஆயிட்டேன்.. என்னால் அங்கிருந்து நகரவே மனசில்லை.. பல நாள் பட்டினியாக அந்த சிங்கம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்..

இதற்கு முன் சிங்கத்தை நான் இப்படியொரு கோலத்தில் கண்டதில்லை. அங்கு இருக்கும் பல விலங்குகளுக்கு முறையாக உணவு அளிக்கப்படவில்லை" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பார்வையாளர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|
|