Advertisement

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்து

By: Karunakaran Sun, 14 June 2020 3:03:46 PM

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் வெடித்த விபத்து

சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தநிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2-ஆம் தேதி முதல் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள 8 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தொடர்ந்து சீனாவில் பெரும் பாதிப்புகள் நிலவி வருகின்றன. இதனால் சீனா பொருளாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சீனாவின் ஜிஜியாங் மாகாணம் ஷென்யாங் - கைகோயு எக்ஸ்பிரஸ்வே சாலையில் சென்று கொண்டிருந்த திரவ எரிவாயு டேங்கர் லாரி திடீரென வெடித்தது. அதன்பின், அருகில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலை ஒர்க்ஸ்ஷாப் மீது பயங்கரமாக மோதியது.

china,liquid gas tanker,zhejiang,explosion ,சீனா,எரிவாயு டேங்கர்,ஜிஜியாங்,தீ விபத்து

இதனால் அங்குள்ள இடங்கள் இடிந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தன. அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 166 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தின் போது சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ், கனமழை தற்போது தீ விபத்து என தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|