Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவையில் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும்

புதுவையில் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும்

By: Monisha Thu, 01 Oct 2020 5:27:13 PM

புதுவையில் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதுவையில் 23-ந் தேதி மாலை முதல் ஊரடங்கு அமலானது. பொது போக்குவரத்து, மதுகடைகள், மதுபார்கள், ஓட்டல்கள், விடுதிகள், வர்த்தக, வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதன்பின் மத்திய அரசு மே மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அளித்து வருகிறது.

3 மாதத்திற்கு பிறகு மே மாத இறுதியில் 25-ந் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. வெளியூரில் இருந்து மது அருந்த வருபவர்களை தடுக்கும் வகையில் கொரோனா வரியும் விதிக்கப்பட்டது. முதல் 3 மாதத்திற்கு வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி விதிப்பால் புதுவையில் மதுபானங்கள் விலை தமிழகத்திற்கு இணையாக உயர்ந்தது. மதுபானங்கள் விலை உயர்வு, பார்கள் திறக்காதது, பொது போக்குவரத்து ரத்து ஆகியவற்றால் மது அருந்த புதுவைக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் மேலும் 3 மாதத்திற்கு மது பானங்களுக்கு கொரோனா வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில் 5-ம் கட்டமாக தற்போது ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

pondicherry,wine shop,liquor bars,curfew,social spaces ,புதுச்சேரி,மதுகடைகள்,மதுபார்கள்,ஊரடங்கு,சமூக இடைவெளி

இதனைத்தொடர்ந்து புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகு இன்று (வியாழக்கிழமை) முதல் மதுபார்கள் திறக்க கலெக்டர் அருண், கலால் துறை விதிகளுக்குட்பட்டு அனுமதி வழங்கி உள்ளார். ஆனால், நள்ளிரவில் அனுமதி வழங்கப்பட்டதால் ஒரேநேரத்தில் அனைத்து பார்களும் திறக்கப்படவில்லை.

மதுபார்களை சுத்தப்படுத்தும் பணி, சமூக இடைவெளியின்படி இருக்கைகள் அமைத்தல் போன்ற பணிகளில் மது பார் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில மதுபார்கள் இன்று திறக்கப்பட்டது.

மேலும் நாளை காந்தி ஜெயந்தி என்பதால் 3-ந் தேதி முதல் மது பார்கள் முழுமையாக திறக்கப்படும். பொது போக்குவரத்துக்கு தடை, மதுபான விலை உயர்வு நீடிப்பதால் கடந்த காலத்தைபோல மது பிரியர்கள் புதுவைக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags :
|