Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – அமைச்சர் எச்சரிக்கை

அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – அமைச்சர் எச்சரிக்கை

By: vaithegi Mon, 17 July 2023 4:26:43 PM

அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை – அமைச்சர் எச்சரிக்கை


சென்னை: கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மதுபான கடைகள் மொத்தமாகவே மூட வாய்ப்பு ..... தமிழகத்தில் மட்டுமே மொத்தமாக 5289 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் இருந்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கோரிக்கை வைத்து கொண்டு வருகின்றனர். எனவே இதன் அடிப்படையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் உள்ள 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் அடுத்தடுத்து சில்லறை விற்பனை மதுபான கடைகள் தொடர்ந்து மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில கடைகளில் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் எழுதப்பட்டு வருகிறது.

sales,liquor ,விற்பனை ,மதுபானங்கள்

இந்த நிலையில், தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் விற்பனை செய்யும் ஊழியர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மதுபான கடைகள் மொத்தமாகவே மூட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார். 21 வயதிற்கு குறைவாக இருக்கும் இளைஞர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags :
|