Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

By: Nagaraj Sun, 02 Aug 2020 5:30:18 PM

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை

முழு ஊரடங்கால் முன்னேற்பாடு... தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7ம் கட்டமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் தளர்வில்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மருந்துகடைகள், மருத்துவமனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

tasmac,sales,tamil nadu,full curfew,liquor ,டாஸ்மாக், விற்பனை, தமிழகம், முழு ஊரடங்கு, மதுபானங்கள்

டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுபிரியர்கள் விருப்பமான மதுபானங்களை அள்ளிச் சென்றனர்.

நேற்று மட்டும் மதுபானங்கள் விற்பனை அமோகமாக இருந்திருக்கிறது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.85 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருக்கின்றன.

திருச்சி மண்டலத்தில் ரூ.42.72 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.40.70 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு ஞாயிறு என்பதால் மதுபானங்களை விருப்பம் போல மதுபிரியர்கள் வாங்கி சென்றதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|