Advertisement

வரும் திங்கட்கிழமை மதுபானம் விற்பனை செய்யக் கூடாது

By: vaithegi Fri, 12 Aug 2022 11:16:56 AM

வரும் திங்கட்கிழமை மதுபானம் விற்பனை செய்யக் கூடாது

சென்னை: இந்தியாவில் சுதந்திர தினத்தை வரும் ஆகஸ்ட் 15ல் வெகுவிமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு, ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த ஆண்டு நாம் ‘அசாதி கா அம்ரித் மோட்சாவ்’ நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி இயக்கமாக மாற்றி வலுப்படுத்த வேண்டும். இதனால் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடிகூறியுள்ளார்.

alcohol,independence day ,மதுபானம் ,சுதந்திர தினம்

இந்த நிலையில் தமிழகத்திலும் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை அரசு செய்து கொண்டு வருகிறது. இதை அடுத்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.

மேலும் வரும் திங்கட்கிழமை மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவிக்கப்படுகிறது. இதை தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின் படி கடுமையான தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :