Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளிகள் & கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல்

ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளிகள் & கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல்

By: vaithegi Wed, 27 July 2022 7:34:22 PM

ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளிகள் & கல்லூரிகளுக்கான விடுமுறை நாட்களின் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு ஜூன் 13ம் தேதி வழக்கம் போல் தொடங்கப்பட்டது. எனவே தற்போது அனைத்து பள்ளிகளும் எந்த தடையும் இன்றி மிக சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

மேலும் பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து சனிக்கிழமைதோறும் அனைத்து பள்ளிகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி விடுமுறை நாட்களின் பட்டியல் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான முக்கிய தினங்களாக 06.08.2022 தேதியை குறைத்தீர்க்கும் நாளாகவும், 27.08.2022 தேதி சனிக்கிழமை CRC நாளாக எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

holidays,schools,colleges ,விடுமுறை , பள்ளிகள் , கல்லூரிகள்

ஆகஸ்ட் மாதத்தில் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்:
03.08.2022 – ஆடிப்பெருக்கு (புதன்கிழமை)
05.08.2022 – வரலட்சுமி விரதம் (வெள்ளிக்கிழமை)
11.08.2022 – யஜூர் உபகர்மா (வியாழக்கிழமை)
12.08.2022 – காயத்ரி ஜெபம் (வெள்ளிக்கிழமை)

ஆகஸ்ட் மாதத்தில் அரசு விடுமுறை நாட்கள்:
09.08.2022 – மொஹரம் பண்டிகை (செவ்வாய்க்கிழமை)
15.08.2022 – சுதந்திர தினம் (திங்கட்கிழமை)
19.08.2022 – கிருஷ்ண ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
31.08.2022 – விநாயகர் சதுர்த்தி (புதன்கிழமை)

Tags :