Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விபரம் - வெளியான தகவல்

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விபரம் - வெளியான தகவல்

By: Monisha Thu, 28 May 2020 1:57:33 PM

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விபரம் - வெளியான தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இருப்பினும் இந்தியாவில் 1.58 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4531 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67692 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 56948 ஆக உயர்ந்துள்ளது. 1897 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். 17918 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

india,coronavirus,most affected states,maharashtra,tamil nadu ,இந்தியா,கொரோனா வைரஸ்,அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள்,மகாராஷ்டிரா, தமிழ்நாடு

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் மொத்த எண்ணிக்கை விபரம்:-
மகாராஷ்டிரா - 56948
தமிழ்நாடு - 18545
குஜராத் - 15195
டெல்லி - 15257
ராஜஸ்தான் - 7703
மத்திய பிரதேசம் - 7261
உத்தர பிரதேசம் - 6991
மேற்கு வங்காளம் - 4192
ஆந்திர பிரதேசம் - 3171
பீகார் - 3061

Tags :
|