Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் விபரம்

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் விபரம்

By: Monisha Mon, 15 June 2020 10:07:24 AM

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் விபரம்

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதையும் கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்குநாள் உயர்ந்து வரும் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையால் உலக நாடுகள் என்ன செய்வதென்று அறியாது திகைத்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளது. நோய் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுவரை உலகம் முழுவதும் சுமார் 78 லட்சத்து 95 ஆயிரத்து 777 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 432,882 பேர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 40 லட்சத்து 56 ஆயிரத்து 063 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

coronavirus virus,usa,brazil,russia,india,china ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் விபரம் வருமாறு:-

அமெரிக்கா - 20,74,082
பிரேசில் - 8,50,514
ரஷ்யா 5,16,458
இந்தியா 3,20,922
பிரிட்டன் - 2,95,828,
ஸ்பெயின்- 2,33,605
இத்தாலி- 2,36,651
ஈரான்- 1,84,955
பாகிஸ்தான்- 1,32,406
சீனா- 84,229

Tags :
|
|
|
|