Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜம்மு காஷ்மீரில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த லித்தியம் கண்டுபிடிப்பு

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த லித்தியம் கண்டுபிடிப்பு

By: Nagaraj Sat, 11 Feb 2023 5:03:44 PM

ஜம்மு காஷ்மீரில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த லித்தியம் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: லித்தியம் கண்டுபிடிப்பு... நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த லித்தியம் என்ற கனிம படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் ஹைமானா பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் என்ற படிமம் இருப்பதாக மத்திய சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.

59 lakh tonnes,jammu and kashmir,lithium, ,ஜம்மு-காஷ்மீர், 59 லட்சம் டன், லித்தியம்

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் 2018-19 ஆம் ஆண்டிற்கான புவியியல் ஆய்வை பல்வேறு மாநிலங்களில் தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் (யூனியன் பிரதேசம்), தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய 10 மாநிலங்களில் தங்கம், லித்தியம், மாலிப்டினம் உள்ளிட்ட 51 வகையான கனிமத் தொகுதிகள் இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் லித்தியத்தின் முதல் கண்டுபிடிப்பு இதுவாகும்.

மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பில் லித்தியம் மிக முக்கியமான மூலப்பொருளாகும்.

Tags :