Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டது

கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டது

By: Nagaraj Mon, 22 Aug 2022 08:39:13 AM

கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டது

புதுடில்லி: கடன் ஆப்கள் மூலம் பணம் பறிப்பு... ரூ.500 கோடிக்கு மேல் செல்போன் கடன் ஆப்கள் மூலம் கடனுதவி மோசடி மற்றும் மிரட்டி பணம் பறித்த கும்பல் பிடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ரூபாய் 500 கோடிக்கு மேல் உடனடி கடனுதவி செய்வதாக மோசடி செய்தும், மிரட்டி பணம் பறித்தும் வந்த கும்பலை முறியடித்துள்ளது டெல்லி காவல்துறை. இதன் பேரில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

delhi,police,chinese nationals,fraud,delhi,police ,டெல்லி, காவல்துறை, சீன நாட்டவர்கள், மோசடி, டெல்லி, காவல்துறை

செல்போன் ஆப் கடன் செயலிகள் மூலம் உடனடி கடன் வழங்குவதாக கூறி அதிக வட்டிகளுடன் வசூலித்தும், பின்னர் பயனாளர்கள் சுயவிபரங்களை திருடியும், பயனர்களை மிரட்டியும் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்துவந்த கும்பலை முறியடித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 பேரை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது டெல்லி காவல்துறை.

மேலும் சீன நாட்டவர்களே இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் என்றும், மோசடி செய்து மிரட்டி பறிக்கப்படும் பணங்கள் ஹவாலா மற்றும் கிரிப்டோகரன்சிகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறது என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|
|