Advertisement

சேலத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 10:46:36 AM

சேலத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


சேலம் : சேலத்தில் அமைந்துள்ள எட்டு மாரியம்மன் கோவில்களில் கோட்டை மாரியம்மன் கோவிலே பெரியது. இதனாலேயே இது "கோட்டை பெரிய மாரியம்மன்" என அழைக்கப்படுகின்றது. சேலத்தில் உள்ள 8 மாரியம்மன்களுக்கும் தலைமையாக விளங்குவதால் “எட்டுப்பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி” என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

இதையடுத்து இச்சூழலில் சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது. தப்பாட்டம், பம்பை,நாதஸ்வரம் மேளதாளங்களுடன் கோலகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

local holiday,salem,fort periya mariamman ,உள்ளூர் விடுமுறை ,சேலம் ,கோட்டை பெரிய மாரியம்மன்


அதன் பின் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. கோயிலின் ராஜகோபுரத்திற்கு ட்ரோன் மூலம் மலர் தூவப்பட்ட நிலையில் பக்தர்கள் முழக்கங்களை எழுப்பி வழிபாடு நடத்தினர்.

இந்த நிலையில், கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார்.

Tags :
|