Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Thu, 16 Feb 2023 12:35:48 PM

இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கன்னியாகுமரி : வரும் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை .... ஆட்சியர் ஸ்ரீதர் அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அன்றைய தினம் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

இதையடுத்து 18.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் நான்காவது சனிக்கிழமை (25.02.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளுர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

local holiday,kanyakumari ,உள்ளூர் விடுமுறை,கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 18.02.2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags :