Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By: vaithegi Fri, 28 July 2023 2:37:35 PM

வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

சேலம் : சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை ... இதையடுத்து இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், தெரிவித்துள்ளதாவது;

" சேலம், அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 09.08.2023, புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

local holiday,salem ,உள்ளூர் விடுமுறை,சேலம்

இதையடுத்து இந்த உள்ளூர் விடுமுறை, செலாவணி முறிச் சட்டம் 1881(Negotiable Instrument Act 1881)-ன் கீழ் வராது என்பதால், அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக. சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 02.09.2023, சனிக்கிழமை அன்று ஈடுகட்டும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்..

Tags :