Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

By: vaithegi Tue, 21 June 2022 12:58:42 PM

ராமநாதபுரம் மாவட்டத்தில்  ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24ம் தேதி உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் : உலகப் புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற இருப்பதால் வரும் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹாவில் வைத்து சந்தனக்கூடு திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த விழாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா ஜூன் 1ம் தேதி மவுலீதுடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

தொடர்ந்து ஜூன் 11ம் தேதி ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை 3 மணிக்கு கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்ஹா வந்தடைந்து. இதற்கு அடுத்தபடியாக வரும் ஜூன் 23ம் தேதியன்று சந்தனக்கூடு திருவிழா துவங்க இருக்கிறது.

festival,dharha,district collector ,திருவிழா,தர்ஹா,மாவட்ட ஆட்சியர்

அதை தொடர்ந்து ஜூன் 24ம் தேதி அதிகாலையில் சந்தனக்கூடு தர்காவிற்கு வந்தடைந்தது. பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து ஜூன் 30ம் தேதி கொடியிறக்கத்துடன் பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு இந்த விழா நிறைவடைய படுகிறது. இப்போது ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும் ஜூன் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் அறிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் ஜூலை 2ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|