Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கிலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கிலி

By: Nagaraj Sat, 30 May 2020 1:33:01 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்த வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் கிலி

தமிழகத்திற்கு வெட்டுக்கிளிகள் படை வராது என்று வேளாண்துறை தெரிவித்திருந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் என்ட்ரி கொடுத்துள்ள வெட்டுக்கிளிகள் விவசாயிகளுக்கு "கிலி"யை ஏற்படுத்தியுள்ளன.

வட மாநிலங்களில், ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து வந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே, கொரோனா ஊரடங்கால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், வெட்டுக்கிளிகள் வருகை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

farmers,people,locusts,krishnagiri,brown ,விவசாயிகள், மக்கள், வெட்டுக்கிளிகள், கிருஷ்ணகிரி, பழுப்பு நிறம்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில், நேற்று மாலை, ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்தன. இவை, வட மாநிலங்களில் இருந்ததை போல, பழுப்பு நிறத்தில் இருந்ததால், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, அவர்கள், வேப்பனஹள்ளி, தி.மு.க., எம்.எல்.ஏ., முருகன் மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இரவாகி விட்டதால், நேற்று யாரும் நேரலகிரி செல்லவில்லை. இன்று வேளாண் அதிகாரிகள், அங்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Tags :
|