Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வட மாநிலங்களை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

வட மாநிலங்களை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

By: Monisha Fri, 29 May 2020 10:58:34 AM

வட மாநிலங்களை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்

பயிர் நிலங்களை அழித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உணவு பஞ்சத்தை உருவாக்கும் வெட்டுக்கிளிகளால் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெட்டுக்கிளிகள் சமீபத்தில் இந்தியாவில் படையெடுத்து குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் பயிர்களை தின்று சேதம் விளைவித்தது. தற்போது வெட்டுக்கிளிகள் படை மகாராஷ்டிரா மாநிலத்துக்குள்ளும் புகுந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு விதர்பா பகுதியில் உள்ள நாக்பூர் மாவட்டத்தின் கட்டோலி தாலுகாவில் உள்ள பெட்ரி, கன்காவ் மற்றும் வார்தா மாவட்டத்தின் அஸ்தி தாலுகாவில் வெட்டுக்கிளிகள் ஆரஞ்சு பயிர் மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்தின. பின்னர் திங்கட்கிழமை இரவு பர்சோனி தாலுகா நோக்கி படையெடுத்தன.

நேற்றுமுன்தினம் பண்டாரா மாவட்டத்துக்குள் அவை புகுந்து விட்டன. அங்குள்ள மொஹாடி தாலுகா மற்றும் தும்சர் தாலுகாவில் உள்ள தேமானி கிராமத்தில் தென்பட்டன. இங்கு நேற்று அதிகாலை தேமனி கிராமத்தில் ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள மரங்களில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் கொத்து, கொத்தாக அமர்ந்து இருந்தன.

locusts,northern states,maharashtra,crop damage,agricultural officers ,வெட்டுக்கிளிகள்,வட மாநிலங்கள்,மகாராஷ்டிரா,பயிர்கள் சேதம்,வேளாண் அதிகாரிகள்

இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டன. இதில் பல வெட்டுக்கிளிகள் செத்து கீழே விழுந்தன. மரங்களின் இலைகளை நாசப்படுத்திய இந்த கொடிய பூச்சிகள், பழங்களை சேதப்படுத்தவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து இங்கு வெட்டுக்கிளிகள் படைபெயடுத்து உள்ளதாக பண்டாரா மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கோண்டியா மாவட்டத்தை நோக்கி தற்போது இவை முன்னேறி செல்வதாகவும், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் வேளாண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

Tags :