Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஏற்ற மக்களவை தலைவர்

காங்கிரஸ் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஏற்ற மக்களவை தலைவர்

By: Nagaraj Wed, 26 July 2023 7:02:12 PM

காங்கிரஸ் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை ஏற்ற மக்களவை தலைவர்

புதுடில்லி: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார்... மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொடுத்துள்ள நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

எனினும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு தேதி குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நான்கு நாட்கள் ஆன போதிலும் மணிப்பூர் விவகாரத்தால் மக்களவை செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது.

காங்கிரஸ் உறுப்பினரான கெளரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கொடுக்க வேண்டுமானால் குறைந்தது 50 உறுப்பினர்கள் அதை ஆதரிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இப்போது இந்தியா கூட்டணியாக உருவாகியுள்ளதால் இதில் எந்த பிரச்னையும் இல்லை.

parliament,paralyzed,demonstration,opposition,central govt ,நாடாளுமன்றம், முடங்கியது, ஆர்ப்பாட்டம், எதிர்க்கட்சிகள், மத்தியஅரசு

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி, தேசியமாநாடு கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, திமுகவின் டி.ஆர்.பாலு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தீர்மானத்தை ஆதரித்தனர்.

இது தவிர பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி சார்பிலும் தனியாத நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் தரப்பட்டது. ஆனால் அதற்கு 9 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருந்தனர். 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயக முன்னணிக்கு 331 உறுப்பினர்கள் பலம் உள்ளது. எதிர்க்கட்சியான இந்தியா அணிக்கு 144 உறுப்பினர்கள் உள்ளனர்.

வாக்கெடுப்பில் வெற்றிபெற எதிர்க்கட்சிகளுக்கு போதிய பலம் இல்லை என்ற போதிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதில் வெற்றியடைந்ததாக வாதிட முடியும். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் ஆஜராகி மணிப்பூர் விவகாரம் குறித்து பேச வாய்ப்பு ஏற்படும் என காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இது தொடர்பான விவாதத்துக்கு தயாராக இருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது.

நாடாளுமன்றம் தொடங்கிய தினத்திலிருந்தே எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை கையிலெடுத்தும், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் கோஷங்கள் எழுப்பியும் வருகின்றன. இதனால் நாடாளுமன்றம் செயல்படாமல் முடங்கிப்போயுள்ளது.

Tags :