Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொலைதூர ரயில்களில் இனி ‘ஏசி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே

தொலைதூர ரயில்களில் இனி ‘ஏசி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே

By: vaithegi Wed, 13 July 2022 12:33:00 PM

தொலைதூர ரயில்களில் இனி ‘ஏசி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே

இந்தியா: ரயில்வேத்துறைக்கு கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரியத் தொடங்கியது. அதன் பின் படிப்படியாக மீண்டும் ரயில்கள் இயங்க தொடங்கியதால் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ரயில்வேத்துறை புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. திட்டத்தின்படி,தொலைதூர ரயில்களில் இனி ‘ஏசி அல்லாத’ ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்படும், மற்ற எல்லா பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாற்றத்தினால் இந்த ரயில்கள் அனைத்திலும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் 2 மட்டுமே இருக்கும். மேலும், இதனால் பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் ஏ.சி. பெட்டிகளிலேயே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.மேலும் பயண கட்டணமும் உயரும். பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எல்.எச்.பி விரைவு ரயிலில் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

trains,sleeper coaches ,ரயில்கள் ,ஸ்லீப்பர் பெட்டிகள்

மேலே உள்ள ரயில்களில் இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்குப் பதிலாக ஏசி – 3 டயர் பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைக்கும். கடந்த ஜூன் 6 ஆம் தேதி தெற்கு ரயில்வே மற்றும் பிற மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் இது பற்றிய உத்தரவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் எல்.எச்.பி. ஸ்லீப்பரின் ஒரு பெட்டியில் 80 பயணிகள் (படுக்கைகளில்) பயணம் செய்யலாம். இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 560 லிருந்து 160 ஆகக் குறையும் நிலை ஏற்படும்.

Tags :
|