Advertisement

நீள் மூக்கு எச்சிட்னா விலங்கு கேமராவில் பதிவு

By: Nagaraj Wed, 03 June 2020 2:46:04 PM

நீள் மூக்கு எச்சிட்னா விலங்கு கேமராவில் பதிவு

மிகவும் அரிதான நீள் மூக்கு எச்சிட்னா விலங்கு தண்ணீர் குடிக்கும் காட்சிகள் கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூகினியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுபவை நீள்மூக்கு எச்சிட்னா என்ற உயிரினம். எறும்பு, கரையான் உள்ளிட்ட பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரினம். உடலில் முட்களை போன்ற அமைப்பை இந்த உயிரினங்கள் பெற்றுள்ளன.

echidna,daronga biology,drinking water,is recorded ,எச்சிட்னா, தரோங்கா உயிரியல், நீர் அருந்தும், பதிவாகி உள்ளது

தரையில் வளைத் தோண்டி மாதக்கணக்கில் அதனுள் இருக்கும இந்த உயிரினங்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். அதைவிட எச்சிட்னாக்கள் இரவு நேர உயிரினங்கள் என்பதால் ரொம்பவே அரிதாகவே பார்க்க இயலும்.

இந்நிலையில் சிட்னி அருகே உள்ள தரோங்கா உயிரியல் பூங்காவில் எச்சிட்னாக்களின் நடமாட்டத்தை அறிந்த கொள்ள வைக்கப்பட்டிருந்த கேமராவில் நீர் அருந்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

Tags :