Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை - டிரம்ப் உத்தரவு

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை - டிரம்ப் உத்தரவு

By: Karunakaran Sat, 27 June 2020 12:41:00 PM

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை - டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் ஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதி கேட்டு கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டம் நடத்தினர்.

பின்னர் இந்த போராட்டம் இனவெறிக்கெதிரான போராட்டமாக உருவெடுத்தது. நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் நடைபெற்றபோது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் பெரும் மோதல்கள் வெடித்ததால், பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

america,trump,long time imprisonment,damaging statue ,அமெரிக்கா, டிரம்ப், நீண்ட கால சிறைத்தண்டனை, சிலை சேதம்

இருப்பினும் அடுத்ததடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தின் போது, தலைவர்களின் சிலைகள் மற்றும் நினைவுச் சின்னங்கள் சேதப்படுத்தப்பட்டன.அமெரிக்கா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இப்போராட்டம் விரிவடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நினைவுச்சின்னங்கள் மற்றும் சிலைகளை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவோருக்கு நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமெரிக்க நினைவுச்சின்னங்கள், நினைவிடங்கள் மற்றும் சிலைகளைப் பாதுகாக்கும் மிக வலுவான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இதன்மூலம், தேசத்திற்கு எதிரான சட்டவிரோத செயல்களுக்கு நீண்டகால சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
|