Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட நஷ்டம்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட நஷ்டம்

By: Nagaraj Mon, 20 June 2022 2:12:45 PM

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட நஷ்டம்

புதுடில்லி: ரயில் பெட்டிகள் எரிப்பால் ஏற்பட்ட நஷ்டம்... அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்பு 700 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முப்படைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பீகாரில் ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பலத்த சேதமடைந்துள்ளன. 60 ரயில் பெட்டிகள், 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன.

loss,train assets,25 cases,damage,burning of boxes ,நஷ்டம், ரயில் சொத்துக்கள், 25 வழக்குகள், சேதம், பெட்டிகள் எரிப்பு

இந்த நிலையில், ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க 80 லட்சமும், ஏசி ரயில் பெட்டியை தயாரிக்க மூன்றரை கோடியும் செலவாகிறது. இதன் மூலம் போராட்டங்களால் ரயில் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டதில், ரயில்வே துறைக்கு 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்தியது தொடர்பாக 25 வழக்குகள் பதியப்பட்டு இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் இளைஞர்கள் அமைதிவழியில் போராட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. மேலும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|