Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்பு...வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

சென்னையில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்பு...வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

By: Monisha Sat, 29 Aug 2020 3:15:07 PM

சென்னையில் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்க வாய்ப்பு...வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்தால் சென்னையில் தாழ்வான பகுதிகள் 3 முதல் 6 அடி வரையில் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வானிலை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் புவி வெப்பமயமாததால் வரும் காலங்களில் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகள் 3 முதல் 6 அடி வரையில் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னையை அடிப்படையாகக் கொண்டு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வரும் காலங்களில் 2015-ஆம் ஆண்டைப்போல பெரு வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு பெருவெள்ளம் ஏற்பட்டால் பெரியமேடு, பட்டாளம், கொசப்பேட்டை, மணலி, திருவொற்றியூர், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகள் 3 அடி, 6 அடி நீரில் மூழ்கும்.

chennai,monsoon,meteorologists,warning,flood ,சென்னை,பருவமழை,வானிலை ஆய்வாளர்கள்,எச்சரிக்கை,வெள்ளப் பெருக்கு

அதேபோல் அண்ணாநகர், அமைந்தகரை, ஷெனாய்நகர், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகள் வெள்ளப் பெருக்கால் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- "சென்னையில் 2015-ல் பெருவெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், 2017-ம் ஆண்டில் கர்நாடகம் மற்றும் ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவில்தான் வடகிழக்குப் பருவமழை பெய்தது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சராசரி அளவு பெய்யும் என எதிர்பார்த்துள்ளோம்" என்றனர்.

Tags :