Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்

By: Nagaraj Tue, 06 June 2023 8:06:26 PM

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி... வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம்: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.

center,monsoon,notification,probability,southwest,weather , அறிவிப்பு, தென்மேற்கு, பருவமழை, மையம், வானிலை, வாய்ப்பு

இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கேரளா மற்றும் தெற்கு கர்நாடகாவின் உள் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் ஆந்திராவில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏமன், ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்தால் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி மேற்கு நோக்கி நகராமல் இருந்தால் ஈரப்பதத்தை பெற்று பருவமழையை தடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :
|