Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குறைந்த விலை பட்டாசு... ஏமாறாதீங்க: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

குறைந்த விலை பட்டாசு... ஏமாறாதீங்க: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

By: Nagaraj Mon, 06 Nov 2023 4:04:54 PM

குறைந்த விலை பட்டாசு... ஏமாறாதீங்க: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

சென்னை: பட்டாசு விற்பனை களத்தில் போலி இணையதளங்கள் உள்ளன என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை என்றதும் முதலில் பட்டாசு தான் அனைவரின் நினைவுக்கும் வரும். இதையடுத்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி தினத்தில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வார்கள்.

இந்திய தயாரிப்பு பட்டாசுகளுடன் அதிக அளவில் சீன தயாரிப்பு பட்டாசுகளும் விதவிதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

alerts,sales,fireworks,websites ,எச்சரிக்கை ,விற்பனை ,பட்டாசு ,இணையதளங்கள், சைபர் கிரைம் போலீசார்

அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி போலி இணையதளங்கள் மூலம் மிகவும் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக மோசடிகள் நடந்து வருவதாகவும், இது பற்றி மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறைந்த விலையில் கிடைக்கும் பட்டாசுகள் குறித்த சமூக வலைதள விளம்பரங்களை மக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

Tags :
|
|