Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்: இந்தாண்டு இறக்குமதி உயரும் என எதிர்பார்ப்பு

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்: இந்தாண்டு இறக்குமதி உயரும் என எதிர்பார்ப்பு

By: Nagaraj Sun, 18 June 2023 12:01:19 PM

ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்: இந்தாண்டு இறக்குமதி உயரும் என எதிர்பார்ப்பு

புதுடில்லி: இறக்குமதி உயரும் என எதிர்பார்ப்பு... ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதால், நடப்பாண்டில் இறக்குமதி அளவு 30 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒருபங்கு ரஷ்யாவிடமிருந்து பெறப்படுவதாக இந்திய எண்ணெய் நிறுவனமான ONGC யின் தலைவர் அருண்குமார் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

trade relations,import volume,india,russia,will strengthen ,வர்த்தக உறவு, இறக்குமதி அளவு, இந்தியா, ரஷ்யா, வலுவடையும்

2021-22ல் ரஷ்யாவிடம் இருந்து 2 சதவீதமாக இருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இறக்குமதி அளவு 30 சதவீதத்தை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில் இந்தியா ரஷ்யா இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என்றும் அருண்குமார் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags :
|
|