Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி மேயர் தேர்தல்... 22ம் தேதி நடத்த துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

டெல்லி மேயர் தேர்தல்... 22ம் தேதி நடத்த துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

By: Nagaraj Sat, 18 Feb 2023 10:30:32 PM

டெல்லி மேயர் தேர்தல்... 22ம் தேதி நடத்த துணை நிலை ஆளுநர் ஒப்புதல்

டெல்லி: டெல்லி மேயர் தேர்தலை வரும் 22ம் தேதி நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புக்கொண்டார்.

டெல்லி மாநகராட்சியில் 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. பாஜக 104 இடங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது.

டெல்லி மாநகராட்சியை பாஜக கைப்பற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதனால் மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த 2 மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை மாற்றிவைக்கப்பட்டது.

delhi,february 22,mayoral election , டெல்லி, பிப்ரவரி 22, மேயர் தேர்தல்

டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.டெல்லி மேயர் தேர்தலை பிப்ரவரி 22ல் நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா ஒப்புக்கொண்டார்.

பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் பரிந்துரையை லெப்டினன்ட் கவர்னர் ஏற்றுக்கொண்டார்.மேயர் தேர்தல் அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது

Tags :
|