Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி

By: Nagaraj Tue, 11 Apr 2023 11:17:56 AM

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோ அணி

புதுடில்லி: பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி கடைசி பந்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். அந்த அணி 11.3 ஓவரில் 96 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோலி 61 ரன்களில் ஆட்டமிழந்தார். கோஹ்லி 44 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசினார்.

ஒரு விக்கெட் விழுந்தபோது, டு பிளெசிஸுடன் இணைந்து ரன்களை எடுத்தார் மேக்ஸ்வெல். இதனால், ஸ்கோர் எகிறியது. 29 பந்துகளை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் டுபிளெசிஸ் கடைசி வரை 79 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். டு பிளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

last ball,lucknow team,thrill,victory, ,கடைசி பந்து, த்ரில், லக்னோ அணி, வெற்றி

தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 18 ரன்களிலும், தீபக் ஹூடா 9 ரன்களிலும் வெளியேறினர்.

ஆயுஷ் படோனி கடைசி ஓவரில் 24 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார், லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ஹர்ஷல் படேல் வீச முதல் பந்தில் 1 ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தில் மார்க் வுட் போல்டாகி வெளியேறினார். 3 ஆவது பந்தில் 2 ரன்களும், 4 ஆவது பந்தில் 1 ரன்னும் எடுக்கப்பட்டபோது ஸ்கோர் சமம் ஆனது.

5வது பந்தில் உனாட்கட் டூப்ளசிசிடம் கேட்ச்கொடுத்து வெளியேற, கடைசி பந்தில் 1 ரன் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது, 1 ரன்னை ஆவேஷ் கான் எடுக்க லக்னோ அணி வெற்றி பெற்றது.

Tags :
|