Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாளை அதிகாலை நடக்கிறது சந்திர கிரகணம்: விஞ்ஞானிகள் தகவல்

நாளை அதிகாலை நடக்கிறது சந்திர கிரகணம்: விஞ்ஞானிகள் தகவல்

By: Nagaraj Sat, 28 Oct 2023 1:18:13 PM

நாளை அதிகாலை நடக்கிறது சந்திர கிரகணம்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடில்லி: நாளை 29-ம் தேதி அதிகாலை 1.05 முதல் 2.24 மணி வரை பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் வரும் 29-ம் தேதி அதிகாலை நிகழ உள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 1.05 மணி முதல் 2.24 மணி வரை 1 மணி 19 நிமிடங்களுக்கு பகுதி நேர சந்திர கிரகணமாக நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

astronomers,naked eyes,eclipse,india,telescope ,வானியலாளர்கள், வெறும் கண்கள், கிரகணம், இந்தியா, தொலைநோக்கி

இந்த சந்திர கிரகணத்தின்போது, பூமியின் நிழல் நிலவின் 12 சதவீதத்தை மட்டுமே மறைக்கவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கிரகணத்தை பார்க்க முடியும் என்றும், கிரகணத்தின் போது சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றாலும், பைனாகுலர் அல்லது தொலைநோக்கி மூலம் பார்த்தால் மிகத் தெளிவாக தெரியும் என்றும் வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|