Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சிகிச்சைக்கு 49 ரூபாய் பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை தொடங்கிய லூபின் மருந்து நிறுவனம்

கொரோனா சிகிச்சைக்கு 49 ரூபாய் பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை தொடங்கிய லூபின் மருந்து நிறுவனம்

By: Karunakaran Thu, 06 Aug 2020 12:42:12 PM

கொரோனா சிகிச்சைக்கு 49 ரூபாய் பேவிபிராவிர் மாத்திரை வினியோகத்தை தொடங்கிய லூபின் மருந்து நிறுவனம்

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அவை சோதனை நிலையிலே உள்ளது. இன்னும் அவை சந்தைக்கு வரவில்லை. கொரோனா சிகிச்சைக்கு பிற நோய்களுக்கான மாத்திரை, ஊசி மருந்துகளை அவசர தேவைக்கு ஏற்ப சோதனை அடிப்படையில் பயன்படுத்த இந்தியாவில் அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, ஜப்பானில் இன்புளூவன்சாவுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரை தரப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு
இந்த மருந்தை தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் வினியோகிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த மாத்திரை ஒன்று ரூ.49 என்ற விலைக்கு சந்தையிடப்பட்டுள்ளது.

lupine pharmaceuticals,49 rupees favibravir pill,corona treatment,corona virus ,லூபின் மருந்துகள், 49 ரூபாய் ஃபேவிப்ராவிர் மாத்திரை, கொரோனா சிகிச்சை, கொரோனா வைரஸ்

200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக பேவிபிராவிர் மாத்திரை கிடைக்கிறது. இதுகுறித்து லூபின் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் சிபல் கூறுகையில், காச நோய் போன்ற பரவலான சமூக நோய்களை நிர்வகிப்பதில், அதன் நிபுணத்துவத்தை இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளை விரைவாக சென்றடையவும், அதன் வலுவான வினியோக வலையமைப்பு மற்றும் களப்பணி மூலம் கோவிஹால்ட் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், நேற்று பேபிபிராவிர் மாத்திரையை புளூகார்ட் என்ற பெயரில் மாத்திரை ஒன்றுக்கு ரூ.35 என்ற விலையில் சந்தையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து அதன் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.

Tags :