Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெயிலிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தேவையான அறிவுறுத்தல் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்

வெயிலிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தேவையான அறிவுறுத்தல் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்

By: vaithegi Wed, 12 Apr 2023 3:34:20 PM

வெயிலிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள தேவையான அறிவுறுத்தல் மா.சுப்பிரமணியன் வழங்கியுள்ளார்

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை வெயில் உச்ச கட்டத்தில் உள்ளது. வழக்கத்தை விட நடப்பு ஆண்டில் கோடை காலத்தில் வெப்பம் அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் முன்னதாகவே எச்சரித்துள்ளனர்.

அதேபோன்று, பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் வெயில் வதைத்து வருகிறது. அதிக வெப்பத்தினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகம் என்பதால் உடலை சீராக பராமரிக்க மக்கள் சில பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

ma. subramanian,people,instruction , மா.சுப்பிரமணியன்,மக்கள் ,அறிவுறுத்தல்

இந்தநிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கோடைக்கால வெப்பம் மற்றும் வெப்ப அலைகளை தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்ரமணியன் அவர்கள் கூறியதாவது, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் செயற்கை ரசாயன குளிர்பானங்கள், டீ, காபி, மதுபானம் போன்றவற்றை முற்றிலும் தவிர்த்து விட்டு, இளநீர், அதிக தண்ணீர், பழச்சாறுகள், மோர் போன்றவற்றை மட்டுமே பருக வேண்டும் என்றும், காற்றோட்டமான, பருத்தியிலான ஆடைகளை அணியவும், இறுக்கமான, கடினமான துணிகளால் ஆன ஆடைகளை தவிர்க்க வேண்டும் என என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
|