Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சீனா டேக்

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சீனா டேக்

By: Nagaraj Sat, 27 Aug 2022 11:37:23 AM

காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இந்திய தேசியக் கொடியில் மேட் இன் சீனா டேக்

ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் சபாநாயகர்கள் மாநாட்டில் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடியில் 'Made in China' என்ற டேக் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பயன்படுத்தப்பட்ட இந்தியாவின் தேசியக் கொடியை சீனாவிடமிருந்து இந்தியா வங்கியுள்ளது.

கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65- வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கு பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

description,indian national flag,speakers,appeal,canada ,விளக்கம், இந்திய தேசியக்கொடி, சபாநாயகர்கள், முறையீடு, கனடா

காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த இந்திய தேசியக்கொடியில், 100% பாலியஸ்டர் என்ற வாசகத்திற்குக் கீழ், மேட் இன் சைனா என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசியக்கொடியை சீனாவில் தயாரித்துப் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் தேசியக்கொடி பயன்படுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், அதற்க்கு இதுவரை அரசு தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் தரப்படவில்லை.

Tags :
|