Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேச அரசு மூத்த குடி மக்களுக்கு உதவும் வகையில் இலவச விமான போக்குவரத்து சேவை திட்டத்தை அறிவிப்பு

மத்திய பிரதேச அரசு மூத்த குடி மக்களுக்கு உதவும் வகையில் இலவச விமான போக்குவரத்து சேவை திட்டத்தை அறிவிப்பு

By: vaithegi Tue, 07 Feb 2023 7:12:46 PM

மத்திய பிரதேச அரசு மூத்த குடி மக்களுக்கு உதவும் வகையில் இலவச விமான போக்குவரத்து சேவை திட்டத்தை அறிவிப்பு

மத்திய பிரதேசம் : இந்த திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயனடையலாம் .... இந்தியாவில் அனைத்து துறைகளும் மூத்த குடிமக்களுக்காக பல வசதிகளை வழங்கி கொண்டு வருகிறது. அந்த வகையில் வங்கி துறையில் சேமிப்பு திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றவர்களை காட்டிலும் அதிகம்.

அதே போன்று இந்திய ரயில்வே வாரியம் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகையாக பயண கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் சலுகை அளித்து கொண்டு வருகிறது.ரயில்வேயை தொடர்ந்து தற்போது விமானத்திலும் இலவச சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேசம் மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அறிவிப்பை அந்த மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

transport,government of madhya pradesh ,போக்குவரத்து ,மத்திய பிரதேச அரசு

அதாவது தீர்த்த தரிசனம் என்ற திட்டத்தில் 60க்கும் மேற்பட்ட குடிமக்கள் அரசின் முழு செலவில் புனித ஸ்தலங்களுக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளார்.இத்தீர்த்த தரிசன திட்டத்தில் தற்போது புனித ரவிதாஸ் பிறந்த இடமும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் மூத்த குடிமக்களுக்கு புனித பயணம் என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது . எனவே இதன் கீழ் புனித தளங்களான ராமேஸ்வரம், சீரடி, காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

Tags :