Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் இறப்பு

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் இறப்பு

By: Karunakaran Tue, 21 July 2020 11:34:31 AM

மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் இறப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநரான லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் பாதிக்கப்பட்டார்.

இதனால் அவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். லால்ஜி டாண்டனுக்கு 85 வயதாகிறது. லால்ஜி டாண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டியல் மத்திய பிரதேச ஆளுநராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டார்.

madhya pradesh,lalji tandon,ill health,governor ,மத்தியப் பிரதேசம், லால்ஜி டாண்டன், உடல்நலக்குறைவு, ஆளுநர்

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். லால்ஜி டாண்டன்மகன் அசுதோஷ் டாண்டன் லால்ஜி டாண்டன் காலமடைந்ததை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு மத்திய பிரதேச முதல்வர் உள்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆளுநர் ஆனந்திபென் பட்டியல் தற்போது உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இறுமாநிலங்களுக்கும் ஆளுநராக உள்ளதால் அவரது பணிச்சுமை கூடியுள்ளது.

Tags :