Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் அதி வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ .. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னையில் அதி வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ .. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

By: vaithegi Tue, 12 Sept 2023 3:25:41 PM

சென்னையில் அதி வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ .. சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய எச்சரிக்கை ...தமிழகத்தில் பொதுவாக மழைக்காலங்களில் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் கண் தொடர்பான நோய்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மெட்ராஸ் ஐ தொற்று தீவிரமாக பரவி கொண்டு வருகிறது.

மேலும், இத்தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் நாளொன்றுக்கு மட்டுமே அதிகளவில் பொதுமக்கள் மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

minister of health,chennai,madras i ,சுகாதாரத்துறை அமைச்சர்,சென்னை,மெட்ராஸ் ஐ

மேலும் இதை தவிர மெடிக்கல்களில் விற்பனை செய்யும் எந்த வித மருந்துகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி குழந்தைகளுக்கு மெட்ராஸ் ஐ தொற்று ஏற்பட்டிருந்தால் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கும்படியும், முழுமையாக தொற்று நோயிலிருந்து விடுபட்ட பிறகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.




Tags :