Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

By: vaithegi Tue, 07 Nov 2023 2:07:45 PM

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: அதிமுவின் கொடி, சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை ....அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் ஒன்று செய்யப்பட்ட நிலையில், பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

எனவே இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுக அதிகாரப்பூர்வாமாக சென்றுள்ளது. இருந்த போதிலும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வந்தார்.

madras high court,edappadi palaniswami,ops,interim restraint ,சென்னை உயர் நீதிமன்றம் ,எடப்பாடி பழனிசாமி ,ஓபிஎஸ்,இடைக்கால தடை

இந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவின் கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.

Tags :
|