Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By: vaithegi Tue, 18 July 2023 09:52:32 AM

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் இன்று உத்தரவு ...முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஈபிஎஸ் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது.இதையடுத்து இது பற்றி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஈபிஎஸ்-க்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேலும் அத்துடன் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் வழக்கு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. அதன் பின்னர் மீண்டும் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஈபிஎஸ் மீது குற்றமில்லை என 2018 -ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை.

high court,edappadi palaniswami ,உயர்நீதிமன்றம் , எடப்பாடி பழனிசாமி

மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே அதன்படி லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் முடிவை ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியத்தில் ரூபாய் 4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகவும், ஈபிஎஸ் மீதான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரியும் , திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

Tags :