Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

By: vaithegi Fri, 25 Aug 2023 09:50:55 AM

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சென்னை: இன்று தீர்ப்பு ...கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இதன் தீர்மானங்கள் பற்றி உயர் நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. அதிமுகவிலிருந்து தங்களை நீக்கியும் பதவியை மீண்டும் கொண்டு வருவது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பன்னீர்செல்வம் ,மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை மட்டும் தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதனைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர் இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது 7 நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது.

madras high court,aiadmk general committee resolution ,சென்னை உயர்நீதிமன்றம்,அதிமுக பொதுக்குழு தீர்மானம்

அதனை அடுத்து கடந்த ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது . சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

Tags :