மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆலோசனை கூட்டத்திற்கு பின் கைகலப்பு
By: Nagaraj Sat, 14 Jan 2023 12:23:05 PM
மதுரை: இருதரப்பினர் மத்தியில் கைகலப்பு... மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
போட்டியை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில் அனைத்து சமூதாயத்தினர் கொண்ட 16 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டது.
அதில், உள்ளவர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், அனைவரும் வெளியே வந்தபோது இருதரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பரஸ்பர வாக்குவாதங்களை போலீசார் தடுக்க முயன்றபோது, அதில் ஒரு தரப்பினர் போலீசாருடனும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.