Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கலைமாமணி விருது வழங்குவது தொடர்பாக மதுரை கோர்ட் எச்சரிக்கை

கலைமாமணி விருது வழங்குவது தொடர்பாக மதுரை கோர்ட் எச்சரிக்கை

By: Nagaraj Sat, 19 Nov 2022 1:01:25 PM

கலைமாமணி விருது வழங்குவது தொடர்பாக மதுரை கோர்ட் எச்சரிக்கை

மதுரை: தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்குவது தொடர்ந்தால் இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை வண்ணாரபேட்டை சேர்ந்த நாதஸ்வர கலைஞர், சமுத்திரம் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், 2019-2020ம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகளில் சில தகுதியற்ற நபர்கள், கலைமாமணி விருது பெற்று உள்ளனர். தகுதியற்றவர்கள் பெற்ற கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும்.

இனிவரும் காலங்களில் முறையான நடைமுறையை பின்பற்றி தகுதியான நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த பொது நல மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

judges,order,inquiry,regulations,kalaimamani award,artists ,நீதிபதிகள், உத்தரவு, விசாரணை, விதிமுறை, கலைமாமணி விருது, கலைஞர்கள்

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், கலைமாமணி விருது சான்றிதழ்களில் உரிய நபர்களின் கையெழுத்து இல்லாமல் விருது வழங்கினர். பொதுக்குழுவில் ஒப்புதலுக்கு வந்த பட்டியலில் உள்ள சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்த பிறகும் தகுதியற்ற நபர்களுக்கு விருது வழங்கியுள்ளதாக வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின் கூறிய நீதிபதிகள், தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்குவது தொடர்ந்தால் இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க. உத்தரவிட நேரிடும் என்றும் என்ன விதிமுறைகளை, பின்பற்றி கலைமாமணி விருதுக்கு கலைஞர்களை தேர்வு செய்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.

டிவி சீரியல், சினிமா உள்ளிட்டவைகளில் ஒரு சில கதாபாத்திரங்களில் வந்து சென்றாலே கலைமாமணி விருதுக்கு தகுதியானவர்களா? கலைமாமணி விருது எவ்வாறு வழங்குகிறீர்கள்? எந்த விதிமுறை அடிப்படையில், கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
|
|