Advertisement

மதுரை கோயில் யானைக்காக நீச்சல் குளம் திறப்பு

By: Nagaraj Sun, 16 Apr 2023 1:17:30 PM

மதுரை கோயில் யானைக்காக நீச்சல் குளம் திறப்பு

மதுரை: யானைக்காக நீச்சல்குளம்... மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை நீச்சல் குளத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சியம்மன் கோவிலில் 25 வயது யானை பார்வதி சேவை செய்து வருகிறது.

இந்த யானை தினமும் புத்துணர்வுடன் குளிப்பதற்கு 23 லட்சம் ரூபாய் செலவில் குளியல் தொட்டி அமைக்கும் பணி நடந்து வந்தது. அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், பார்வதி யானையின் உடல் சூட்டை குறைக்க குளியல் தொட்டி அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

elephant,meenakshi,parvati,pond,swimming,temple , குளம், கோவில், நீச்சல், பார்வதி, மீனாட்சி, யானை

அதன்படி, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நீச்சல் குளத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். தொடர்ந்து யானைக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். அமைச்சரை ஆசிர்வதித்த யானை நீச்சல் குளத்தில் இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாடியது.

அதன்பின், மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சித்திரை நான்கு வீதிகளிலும் கட்டப்பட்டுள்ள நிழற்கூரைகளை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பார்வதி யானை நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், கண் பாதிப்பு மேலும் மோசமடையாமல் இருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Tags :
|