Advertisement

மகா தீபம் இன்று நிறைவடைகிறது

By: vaithegi Fri, 16 Dec 2022 12:18:39 PM

மகா தீபம் இன்று நிறைவடைகிறது

திருவண்ணாமலை : கார்த்திகை மகா தீபம் இன்று இரவு நிறைவு ... திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத மகா தீப திருவிழா கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் ஏற்றுதல் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்ந்தது.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு அணியாமல் ஏரிவது வழக்கம். புயல், மழை ஆகிய இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் கூட மகா தீபம் பிரகாசமாக எரியும்.

thiruvannamalai,maha deepam ,திருவண்ணாமலை ,மகா தீபம்

இதனை அடுத்து இந்த நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் முக்கிய நிகழ்வான கார்த்திகை மகா தீபம் இன்று இரவுடன் நிறைவடைகிறது. 11 நாட்கள் மலை உச்சியில் மகாதீபம் எரிந்து வந்த நிலையில் நாளை காலை தீபக் கொப்பரையை மலையிலிருந்து கோயிலுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. எனினும் கூட 2668 அடி உயரமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் அடையாமல் சுடர் விட்டு எரிந்தது.

Tags :