Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சத்தில் மகாராஷ்டிரா

By: Monisha Sat, 23 May 2020 11:55:29 AM

கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சத்தில் மகாராஷ்டிரா

உலக நாடுகளை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மிக வேகமாக பரவி வருகிறது. இது நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

coronavirus,maharashtra,infection,india,dharavi ,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,நோய்த்தொற்று,இந்தியா,தாராவி

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1940 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 44582 ஆக உயர்ந்துளள்து. கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1517 ஆக உயர்ந்துள்ளது. இங்கு நோய் பரவ தாராவி ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.

தமிழகத்தில் 14753 பேருக்கும், குஜராத்தில் 13268 பேருக்கும், டெல்லியில் 12319 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :
|